விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்

pm-modi-inaugurates-expanded-thoothukudi-airport

தூத்துக்குடி விமான நிலையம் ரூ.380 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிய விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

தென்னகத்தின் தொழில்நகரமாக தூத்துக்குடி உருவாகி உள்ளது. 1992ம் ஆண்டு இங்குவிமான நிலையம் திறக்கப்பட்டது. 1992-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம்தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக வாயுதூத் விமானம் பறந்தது.

தற்போது இரண்டு தனியார் விமான நிறுவனங்கள் மூலம் சென்னை மற்றும் பெங்களூருக்கு 9 விமான சேவைகள் அளிக்கப்படுகின்றன. இதனை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கு நிலம் கையகப்படுத்தப்பட்டு ரூ.381 கோடி செலவில் விரிவாக்க பணிகள் மேற்காள்ளப்பட்டன. இதில் 1,350 மீட்டர் விமான ஓடுதளம் 3 ஆயிரம் மீட்டர் நீள ஓடுதளமாக மாற்றப்பட்டது. இதில் ஒரே நேரத்தில் 5 விமானங்களை நிறுத்தும் வகையிலும், பல்வேறு வசதிகளுடனும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த விரிவாக்கப் பணிகள் முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயாராகியுள்ளது. வரும் ஜூலை 27 மற்றும் 28ம் தேதிகளில் தமிழகம் வரும் பிரதமர் மோடி விரிவாக்கம் செய்யப்பட்ட தூத்துக்குடி விமான நிலையத்தை திறந்து வைக்கிறார்.

READ MORE ABOUT :