தமிழக முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி உள்ள யாதும் அறியான் திரைப்பட குழுவினர் தூத்துக்குடியில் ரசிகர்களுடன் அமர்ந்து படத்தை பார்த்து ரசித்தனர். தூத்துக்குடியைச் சேர்ந்த இயக்குனர் கோபி இயக்கத்தில் தினேஷ் அறிமுகமாகி நடித்துள்ள யாதும் அறியான் படம் இன்று தமிழகம் முழுவதும் வெளியானது. பிரபல குணச்சித்திர நடிகர் அப்புகுட்டி, மற்றும் கே பி ஒய் ஆனந்த் பாண்டியன் ஆகியோரும் இந்த படத்தில் நடித்துள்ளனர்.
தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் இன்று காலை வெளியான திரைப்படத்தை இயக்குனர் கோபி மற்றும் நடிகர் தினேஷ் அப்புகுட்டி ஆனந்த் பாண்டியன் ஆகியோர் ரசிகர்களுடன் அமர்ந்து கண்டு ரசித்தனர் . இதைத்தொடர்ந்து கேக் வெட்டி ரசிகர்களுடன் உற்சாகமாக கொண்டாடினர் . திரைப்படத்தை காண வந்த ரசிகர்கள் நடிகர் தினேஷ் மற்றும் அப்புகுட்டி ஆனந்த் பாண்டியன் ஆகியோருடன் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இந்த திரைப்படத்தில் ஒரு காட்சியில் 2026 இல் தமிழக முதல்வர் விஜய் என பத்திரிக்கை சுவரொட்டியில் காட்டப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து யாதும் அறியான் பட கதாநாயகன் தினேஷ் கூறியதாவது,
தூத்துக்குடி மக்களுடன் இணைந்து இந்த திரைப்படத்தை பார்த்தது மிகவும் சந்தோஷமாக இருந்தது. படம் நன்றாக வந்துள்ளதாக எல்லோரும் கூறுகின்றனர் .ரசிகர்கள் இன்னும் எங்களுக்கு ஆதரவு தர வேண்டும் . உங்கள் வீட்டு பையன் நினைத்து நான் மென்மேலும் வளர உங்கள் ஆதரவு தர வேண்டும் .முதல் படம் என்பதால் முதலில் நடிக்கும் போது கஷ்டமாகத்தான் இருந்தது . பின்னர், நன்றாக நடிக்க தொடங்கி விட்டடென். தற்போது படம் வெளியாகி மக்களிடம் நல்ல ஆதரவு கிடைத்துள்ளது இதை கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக உள்ளது என்றார்.
தொடர்ந்து இயக்குனர் கோபி கூறுகையில், படத்தில் திரில்லர் காட்சிகள் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். தற்போது குறைந்த அளவிலான திரையரங்குகளில் படம் வெளியாகியுள்ளது. ரசிகர்களின் ஆதரவுக்கு பின்பு அதிக திரையரங்குகளில் வெளியாகும் . திரையரங்குகள் கிடைப்பதில் எங்களுக்கு சிக்கல் உள்ளது ரசிகர்களுக்கு த்ரில்லர் எக்ஸ்பீரியன்ஸ் கிடைக்கும் .என்டர்டைமெண்டும் படத்தில் உள்ளது என கூறியுள்ளார்.









.jpg)
