தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பழைய காயலில் இருந்து கோவங்காடு செல்லும் விளக்கு சாலையில் நேற்று மாலை சாயர்புரம் தெற்கு கோவங்காடுவைச் சேர்ந்த செல்வகுமார் (49) என்பவரை அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் கத்திah;y கொண்டு குத்தியுள்ளனர். வயிறு, மார்புக்கு கீழ், முதுகு ஆகிய பகுதிகளில் குத்தியதில் பலத்த காயமடைந்தவரை, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். சிகிச்சை பெற்று வந்தவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், இறந்த செல்வக்குமார் சில வருடங்களுக்கு முன்பு சொத்து பிரச்சனை காரணமாக தனது அண்ணன் விஜயகுமாரின் மனைவியை அரிவாளால் வெட்டியுள்ளார். இதனால் , இரண்டு குடும்பத்தினருக்கும் கடுமையான முன் பகை இருந்துள்ளது.
இதைத்தொடர்ந்து , அண்ணன் விஜயகுமாரின் மகன்கள் சந்திரசேகர் (29), அசோக் குமார் (27), ராஜேஷ் - (25) ஆகியோர் தனது தாயை வெட்டிய சித்தப்பா செல்வகுமார் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளனர். இதற்கிடையே, இரு குடும்பத்துக்கும் சொந்தமான வாழை தோட்டத்தை பங்கு பிரிப்பதிலும் பிரச்னை இருந்துள்ளது. இதனால் செல்வகுமாரை அண்ணன் மகன்கள் விரோதத்தில் ஆட்களை வைத்து கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.











