திருச்செந்தூர் முருகன் கோவிலில் சஷ்டி திருவிழாவை முன்னிட்டு கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெற உள்ள இடம் சமன்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மிகவும் பிரசித்தி பெற்ற கந்தசஷ்டி விழா வருகிற அக்டோபர் மாதம் 22ம் தேதி தொடங்குகிறது. முருகன் சூரனை வரம் செய்யும் சூரசம்ஹாரம் அக்டோபர் 27 ஆம் தேதி கோவில் முன்புள்ள கடற்கரையில் மாலை 4.30 மணி அளவில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் .

வெளிமாவட்டங்கள் மட்டுமல்லாமல் வெளி மாநிலம் வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை தருவார்கள். இதையடுத்து, கோவில் முன்புள்ள கடற்கரையில் சூரசம்ஹாரம் நடைபெறும் இடத்தில் உள்ள கடற்கரை மணல்களை சமன்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளது.இதற்காக கடற்கரை மணலை சமன்படுத்தும் நவீன ஜேசிபி இயந்திரம் மூலம் அய்யா கோயிலில் கோவில் முன்பு வரை மணல்மேடுகளாக இருக்கும் மணல் திட்டுகளை அகற்றி சமன்படுத்தும் பணி நடந்து வருகிறது. இந்த பணி இன்னும் சில தினங்களில் முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.











