வல்லநாட்டில் இளைஞர்கள் மீது போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி, கடைகளை அடைத்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள வல்லநாடு கிராமத்தில் போலீசார் தொடர்ந்து இளைஞர்கள் மீது பொய் வழக்கு பதிவதாக மக்கள் புகார் கூறுகின்றனர். அப்படி, கைதாகும் இளைஞர்களை கை , கால்களை போலீசார் உடைப்பதாகவும் வல்லாநாடு மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதை கண்டித்து வல்லநாடு, திருநெல்வேலி தூத்துக்குடி நான்கு வழி சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட மளிகை கடைகள், காய்கறி மற்றும் ஹோட்டல்கள் என அனைத்தும் அடைத்து, ஒரு நாள் அடையாள போராட்டத்தில் வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் , முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டு வருகிறது. பாதுகாப்பிற்காக நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.












