கோவில்பட்டி பெண் போலீசிடம் சிக்கிய எஸ்.ஐ கதறல் : போலீஸ் நிலையம் சென்ற மனைவி... பரபர தகவல்கள்

female-police-threatens-kovilpatti-si

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எஸ்.ஐ. செல்வகுமார் என்பவருடன் நெருங்கி பழகி ஜோடி போட்டவர் பெண் போலீஸ் இந்திரா காந்தி. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில் , தன்னிடமுள்ள ரகசிய வீடியோ ஆடியோக்களை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் கேட்டு பெண் போலீஸ் இந்திரா காந்தி எஸ்.ஐ. செல்வகுமாரை தொடர்ந்து மிரட்டியுள்ளார். இது தொடர்பாக எஸ்.ஐ.யின் மனைவி அளித்த புகாரின் பேரில் பெண் போலீஸ் இந்திரா காந்தி, அவருடன் கூட்டு சதியில் ஈடுபட்ட 5 பேர் மீது கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி டிராபிக் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த மூன்று ஆண்டுகளாக சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்தவர் செல்வகுமார். இவருக்கும் கயத்தாறு காவல் நிலையத்தில் இருந்து டிராபிக் பிரிவுக்கு மாற்றப்பட்ட பெண் போலீஸ் இந்திரா காந்தி என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் திருமணத்தை மீறிய உறவாக மாறியது.

இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படவே கோவில்பட்டி சாலையில் வைத்து இருவரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த தகவல் மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் கவனத்துக்கு சென்றதையடுத்து எஸ்.ஐ. செல்வகுமாரை திருச்செந்தூருக்கும், பெண் போலீஸ் இந்திரா காந்தியை புளியம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கும் மாற்றப்படட்னர்.

பின்னரும், இருவரும் அடங்கவில்லை. மொபைல் போனில் கடும் வாக்குவாதம் செய்து, ஒருவரை ஒருவர் ஏமாற்றி விட்டதாக சண்டை போட்ட ஆடியோ சமூக வலைதளங்களிலும் வெளியானது. இதையடுத்து, செப்டம்பர் 5 ஆம் தேதி பெண் போலீஸ் இந்திரா காந்தியை சஸ்பென்ட் செய்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான்
உத்தரவிட்டார். டிராபிக் எஸ்.ஐ. செல்வகுமாரை திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி. சந்தோஷ் ஹதிமணி சஸ்பெண்ட் செய்தார். இருவரும் தற்போது சஸ்பென்டில் உள்ளனர்.

இந்நிலையில் எஸ்.ஐ. செல்வகுமாரின் மனைவி ராஜலட்சுமி அக்டோபர் 24ஆம் தேதி கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பெண் போலீஸ் இந்திரா காந்தி மீது பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில்.... 'இந்திராகாந்தி எங்கள் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அசிங்கமாக பேசி பணம் கேட்டு மிரட்டுகிறார். 10க்கும் மேற்பட்ட நபர்களுடன் சேர்ந்து என் கணவரின் காரினை வழிமறித்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எங்களிடம்10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டுகிறார். பணத்தை தராவிட்டால் உன் கணவரின் ரகசிய ஆடியோ மற்றும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு அசிங்கப்படுத்துவேன் என்று மிரட்டுகிறார். எனவே, இந்திராகாந்தி மீதும் அவரின் கும்பல் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என கூறியுள்ளார்.

போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ள இந்த மிரட்டல் புகார் தொடர்பாக மாவட்ட எஸ்.பி. உத்தரவின்படி, பெண் போலீஸ் இந்திரா காந்தி, மதன், தர்மர், அருண் உள்ளிட்ட 5 பேர் மீது 7 பிரிவுகளில் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய சப்- இன்ஸ்பெக்டர் சந்தனமாரி வழக்கு பதிவு செய்துள்ளார். விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் மாரியப்பன் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

பெண் போலீஸ் இந்திரா காந்தி பற்றி கதை கதையாக சொல்கிறார்கள். பஸ் டிரைவர் தொடங்கி இன்ஜினியர், பைனான்சியர், அரசியல் பிரமுகர் , கான்ஸ்டபிள், ஏட்டு, எஸ் ஐ என பலருடன் தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது. காக்கி சீருடை அணிந்து பல ஆண்களின் வாழ்க்கையில் விளையாடியதாகவும் கூறுகிறார்கள். எனவே, ஒரு தனி அதிகாரியை நியமித்து தீர விசாரித்து பெண் போலீசின் சீட்டிங் கதைக்கு முடிவுரை எழுத வேண்டும் என்கின்றனர் போலீஸ் தரப்பு.

READ MORE ABOUT :