எஸ்.ஐ.ஆர். சீர்திருத்தம் : தூத்துக்குடியில் த.வெ.க ஆர்ப்பாட்டம்

SIR-Reform-tvk-protest-in-Thoothukudi

வாக்குரிமையை பறிக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குளறுபடிகளை கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில் உள்ள குளறுபடிகளை கண்டித்து தமிழக வெற்றி கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தூத்துக்குடியில் விவிடி சிக்னல் பகுதியில் தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான நிர்வாகிகள் , தொண்டர்கள் கலந்து கொண்டு எஸ் ஐ ஆர் குளறுபடிகளை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர்

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற த.வெ.க நிர்வாகிகள் கூறுகையில், " வாக்குச்சாவடி அலுவலர்கள் வழங்கக்கூடிய படிவத்தை திமுக நிர்வாகிகள் வீடு வீடாக வழங்கி வருகின்றனர். மேலும் வாக்காளர் பட்டியலில் இளம் தலைமுறையினர் மற்றும் புதிய வாக்காளர்களை நீக்கும் நடவடிக்கையில் திமுக நிர்வாகிகள் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, தேர்தல் ஆணையம் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை முறையாக நடத்த வேண்டும் "என்றனர்.

READ MORE ABOUT :