தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலத்தின் தூய யோவான் பேராலயத்தில் இன்று நடைபெற்ற சேகர மன்றத் தேர்தலில் அனைத்து பதவிகளையும் எஸ்.டி.கே. அணியினர் போட்டியின்றி கைப்பற்றினர்.
நாசரேத் தூய . யோவான் பேராலயத்தில் இன்று காலை சிறப்பு ஆராதனையைத் தொடர்ந்து மூன்றாவது கட்டமாக சேகர மன்ற நிர்வாகிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.பேராலய தலைமை குரு ஹென்றி ஜீவானந்தம் தேர்தல் அதிகாரியாக இருந்து தேர்தலை நடத்தினார். இதில் இதுவரை நடந்து முடிந்த முதல் இரண்டு கட்ட தேர்தலில் வெற்றி பெற்ற பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
சேகர செயலாளராக ஏற்கனவே முதற்கட்ட தேர்தலில் எஸ்.டி.கே. அணியில் வெற்றி பெற்ற திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ராஜசிங் சாலமோன் மற்றும் பொருளாளராக நாசரேத் சேகர மன்ற உறுப்பினரும், அசன கமிட்டி பொருளாளருமான லேவி அசோக் சுந்தர்ராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.







