சாத்தான்குளத்தில் 70 அடி உயர ஜனநாயகன் பட பேனர் அகற்றம்

70-foot-tall-banner-featuring-the-image-of-jananayagan-removed-in-sathankulam

நடிகர் விஜய் நடித்த ஜனநாயகன் படம் 9ம் தேதி வெளியாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. சென்சார் சான்றிதழ் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் ஜனவரி 9ஆம் தேதி காலை தீர்ப்பு வழங்க உள்ளது. எனினும், தமிழகம் முழுவதும் விஜய்யின் ரசிகர்கள் திரையரங்கங்களுக்கு முன் பிரமாண்ட கட்வுட்களை வைத்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்திலுள்ள லட்சுமி தியேட்டரில் ஜனநாயகன் படம் வெளியாகிறது.

இதையொட்டி, த.வெ.க நிர்வாகி வி.ஜி. சரவணன் சார்பில் 70 அடி உயரத்துக்கு பிரமாண்டமாக விஜய் கட்வுட்கள் வைக்கப்பட்டிருந்தன. முறையான அனுமதி பெறாமல் இந்த கட்வுட் வைக்கப்பட்டதாக தெரிகிறது. தொடர்ந்து , இந்த கட்டவுட்களை அகற்றிய, போலீசார் வி.ஜி. சரவணன் மீது வழக்கும் பதிந்துள்ளனர். இந்த சம்பவம் விஜய் ரசிகர்கள் மற்றும் த.வெ.க கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

READ MORE ABOUT :