தூத்துக்குடி மாநகராட்சி ஊழியர்கள், கவுன்சிலர்களுக்கு விளையாட்டு போட்டி மேயர் ஜெகன் தொடங்கி வைத்தார்

Sports-competition-for-Thoothukudi-Corporation-employees-and-councillors

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார்

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளை முன்னிட்டு தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் மாநகராட்சியில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள் இடையிலான விளையாட்டுப் போட்டிகள் மாநகராட்சி விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது ஆண்களுக்காக கிரிக்கெட் போட்டிகளும் பெண்களுக்கு த்ரோ பால் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டிகளை தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் பிரியங்கா தலைமையில் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தொடங்கி வைத்தார் .இதை தொடர்ந்து விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் பொங்கல் தினத்தில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.

READ MORE ABOUT :