தூத்துக்குடியில் மீன்கள் விலை கிடு கிடு உயர்வு

Fish-prices-increased-in-Thoothukudi

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டு படகு மீன்பிடி துறைமுகத்தில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நாட்டுப் படகுகள் கரை திரும்பின. எனினும் , சீலா மீன் ஒரு கிலோ 1100 ரூபாய் வரையும் விளை மீன், ஊழி, பாறை ஆகிய மீன்கள் கிலோ 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரையும் நண்டு ஒரு கிலோ 800 வரை விற்பனையாகின்றன.

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நேற்று ஆழ் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகுகள் கரை திரும்பின. கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று காரணமாக மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டது . நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை தூத்துக்குடி மாவட்டத்தில் விசைப்படகு மற்றும் நாட்டுப் படகு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது

நேற்று சனிக்கிழமை என்பதால் திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடி துறைமுகத்திற்கு திரும்பின. மீன்களை வாங்க பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் கூட்டம் அலைமோதியது . இதன் காரணமாக மீன்களின் விலை உயர்ந்தது. சீலா மீன் ஒரு கிலோ 1100 ரூபாய் வரையும் விளைமீன் ,ஊழி , பாறை ஆகிய மீன்கள் கிலோ 500 ரூபாய் முதல் 700 ரூபாய் வரையும் நண்டு ஒரு கிலோ 800 ரூபாய் வரையும் சாலை ஒரு கூடை 2000 முதல் 2500 ரூபாய் வரையும் கேரை, சூரை ஆகிய ரகம் மீன்கள் கிலோ 250 ரூபாய் முதல் 300 ரூபாய் வரையும் விற்பனையானது .மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்ட நிலையிலும் மீன்களுக்கு ஓரளவு விலை கிடைத்ததால் மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

READ MORE ABOUT :