10 நாட்களில் கூட்டணி குறித்து முடிவு - திருச்செந்தூரில் பிரேமலதா தகவல்

decision-on-alliance-in-10-days-premalatha-information-in-tiruchendur

வரும் சட்டமன்ற தேர்தல் தமிழ்நாட்டிற்கும் மக்களுக்கும் ஒரு மாற்றத்தையும், வெற்றியையும் கொடுக்கும் என்ன தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார்.

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது,

'' உள்ளம் தேடி, இல்லம் நாடி, மக்களை தேடி மக்கள் தலைவர் ரத யாத்திரை நிகழ்ச்சிக்காக தூத்துக்குடி மாவட்டம் வந்துள்ளேன். கழக நீர் நிர்வாகிகள் யாருடன் கூட்டணி வைக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ அவர்களுடன் கூட்டணி வைப்போம். கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பேன். முருகன் அருளால் நல்ல மகத்தான கூட்டணி அமையும், அது எல்லோருக்கும் நிச்சயமாக நன்மை பயன் அளிக்கும். விஜய் பற்றி கேட்டபோது , அவரிடம் அவர் கட்சியைப் பற்றி கேளுங்கள். என்னிடம் எங்கள் கட்சியைப் பற்றி கேளுங்கள் நான் சொல்கிறேன். மற்றவர்களைப் பற்றி கேட்கும் போது நான் எப்போதும் பதில் சொல்வதில்லை.2026 தேர்தல் நிச்சயமாக தமிழ்நாட்டிற்கும் மக்களுக்கும் ஒரு மாற்றத்தையும், வெற்றியையும் கொடுக்கும். நாங்கள் ஒரு நல்ல கூட்டணி அமைப்போம். தூத்துக்குடி அருகே உள்ள முள்ளக்காட்டில் இருந்து பழைய காயல் வரை சுமார் 3000 ஏக்கர் உப்பல நிலத்தை கையகப்படுத்தி மத்திய மாநில அரசு கப்பல் கட்டும் தளம் அமைக்க நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உப்பள நிலங்களை கையகப்படுத்தும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் கப்பல் கட்டும் தளம் திட்டத்தை கைவிட கோரி முத்தையாபுரம் பகுதியில் உட்பள தொழிலாளர்கள் உப்பு உற்பத்தியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். உப்பளங்களை அழித்து கப்பல் கட்டும் தளம் கொண்டுவரும் பட்சத்தில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் போல் சூழ்நிலை உருவாகும். தொழிலாளர்களின் பிரச்சனையை தமிழக முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்வேன்

வரும் சட்டமன்ற தேர்தலில் தேமுதிக கூட்டணியில் இருக்கும் கட்சி தான் கண்டிப்பாக ஆட்சி அமைக்கும் . அப்போது தேமுதிக தூத்துக்குடி உப்பள உற்பத்தியாளர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்போம். 10 நாட்களில் கூட்டணி குறித்து முடிவெடுப்போம். ''

இவ்வாறு அவர் கூறினார்.

READ MORE ABOUT :