பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை: இன்ஸ்டாவில் விளக்கமளித்த இன்ஸ்பெக்டர் திலீபன்
தூத்துக்குடி மாவட்டத்தில் சிங்கபெண் அதிரடிப்படையில் இடம் பெற்ற பெண் போலீஸ் ஒருவருக்கு அதே காவல்நிலையத்தின் இன்ஸ்பெக்டர் அளித்த டார்ச்சர் குறித்து போலீஸ் உயர்அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் ஆறுமுகநேரி போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் திலீபன் விளக்கமளித்து வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது,'' என்னை சேரன்மாதேவிக்கு மாற்றியுள்ளனர். அங்கே நான் போகப்போகிறேன். என் தரப்பு விளக்கத்தைச் செல்ல நான் என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை எடுத்துள்ளேன். இதற்காக, அதிகாரிகள் வருத்தட வேண்டாம். என் மீது பாலியல் புகார் கூறியுள்ளனர். என்னுடைய, ஸ்டேஷனில் 6,7 பெண்கள் பணியாற்றுகின்றனர். வேலைரீதியாக திட்டுவேனே தவிர, எந்த விதத்திலும் தொல்லையோ அச்சுறுத்தலோ மென்டல் டார்ச்சரோ தந்தது இல்லை. என்னுடைய , பிள்ளைகள் என்றுதான் பெண் போலீசாரை நான் கூறுவேன். இந்த மாதிரி ஒரு புகார் என் மீது வந்திருக்காது என்று 100 சதவிகிதம் நம்புகிறேன்.அப்படி, கொடுத்திருந்தாலும் தமிழ்நாடு காவல்துறையில் சி.யூ.ஜி வாட்ஸப் வைத்துள்ள இன்ஸ்பெக்டர்களில் நானும் ஒருவன். என்னுடைய அதிகாரிகள் எப்போது,எனது செல்போனை கேட்டாலும் தர நான் தயார். ஆனால், என்னுடைய புகைப்படத்தை வெளியிட்டு வேகமாக செய்தியை பரப்ப வேண்டிய அவசியம் என்ன வந்தது? என் மீது புகார் இருந்தால் தாராளமாக செய்தி வெளியிடலாம். வழக்குப்பதிவு செய்யலாம். உண்மைத்தன்மையை ஆராய்ந்து செய்தி வெளியிட வேண்டாமா? இந்த விவகாரத்தில் உண்மையை விசாரித்துசெய்தி வெளியிட்டால் எனக்கு நன்றாக இருக்கும்.

இந்த காவல் நிலையத்தில் எனக்கு கீழ் 66 பேர் பணியில் உள்ளனர். எல்லோருக்கும் எல்லா முறையிலும் ஒரே மாதிரி டூட்டி போட முடியாது. ஒருத்தருக்கு மட்டும் சலுகை கொடுக்க முடியாது. டூட்டி முன்ன பின்னதான் போடுவேன். என்னுடன் பணியாற்றியவர்கள் என்னை பற்றி தவறாக நினைத்தால் கூட நான் வேலையை விட்டு போக தயாராக உள்ளேன். இந்த புகாரில் இருந்து விடுபடாமல் சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் பணியில் சேர மாட்டேன். எனது , வேலையை 7 நாட்களுக்குள் ராஜினாமா செய்யது விடுவேன். நான் ஒரு ஸ்போர்ட்ஸ் கிளம் நடத்துகிறேன். 150 குழந்தைகள் என்னிடம் உள்ளனர். அவர்களுக்கு எல்லாம் நான்தான் உதவுகிறேன். அதற்காக, கடன் வாங்குவேன். நேற்று கூட, நான் நான் சக போலீசாரிடம் வாங்கிய கடனை திருப்பி கொடுத்துள்ளேன். நான் கவுரவத்துக்காக வேலை பார்ப்பவன். சம்பளத்தை மட்டுமே நம்பி வாழ்க்கை நடத்துபவன். என் மீது சுமத்தப்பட்ட இந்த குற்றச்சாட்டை களைந்த பிறகு, பணியில் சேருவேன். இல்லையென்றால், போலீஸ் துறையில் இருக்க மாட்டேன். ''
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இன்ஸ்பெக்டர் திலீபன் இன்று சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் மீது துறைரீதியாக விசாரணை செய்யப்பட்டு வருவதாக தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி தெரிவித்துள்ளார்.







