உலகில் நோபல் பரிசு பெற்றவர்களில் ஆறு சதவீதம் மட்டுமே பெண்களாக உள்ளனர் பெண்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் தடைகளைத் தாண்டி முன்னேற வேண்டும். திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் நடைபெற்ற மகளிர் மற்றும் சிறுமிகள் தின விழாவில் இந்திய விண்வெளி மையத்தின் கிரயோஜனிக் இன்ஜின் குழு இயக்குனர் பேசினார்.
சர்வதேச மகளிர் மற்றும் சிறுமிகள் தினம் இன்று கொண்டாடப்பட்டதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட அறிவியல் மையத்தில் பெண்களுக்கான அறிவியல் சவால்கள் தொடர்பான நிகழ்ச்சி நடைபெற்றது இதில் இந்திய விண்வெளி மையத்தின் மகேந்திரகிரி திரவ உந்து எரிபொருள் மையத்தின் கிரயோஜனிக் இன்ஜின் திட்டக் குழு இயக்குனர் ஸ்வீட் ஆன்னி கிரேஸ் கலந்துகொண்டு பேசினார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பாக பெண்கள் , கல்லூரி மாணவிகள் அறிந்து கொள்ள வேண்டிய தகவல்கள் குறித்து விளக்கிய ஆன்னி அனைத்து துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகமாக இருக்க வேண்டும். வெற்றி பெற பல்வேறு தடைகள் உள்ளன. அதனை தாண்டி முன்னேற வேண்டும். உலக அளவில் தற்போது வரை 1012 நோபல் பரிசுகள் வழங்கப்பட்டுள்ளது . இதில் 64 பெண்கள் நோபல் பரிசை பெற்றுள்ளனர். நோபல் பரிசு பெற்றதில் 6 தசவிகிதம் பேர் மட்டுமே பெண்கள். உயர்கல்வி பெறுவோரின் சதவீதம் மிகக் குறைவாக இருந்த காலத்திலேயே மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளில் பெண்கள் சாதித்துள்ளனர் . தற்போது உயர் கல்வி பெறுவோரின் எண்ணிக்கை குறிப்பாக பெண்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது . பல்வேறு சாதனைகளை பெண்கள் படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் மாவட்ட அறிவியல் அலுவலர் முத்துக்குமார் நூற்றுக்கு மேற்பட்ட கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டனர்.