திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளராக பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் மீண்டும் நியமனம்
பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினராக தற்போது இருக்கும் திமுகவைச் சேர்ந்த அப்துல் வகாப் முன்னதாக திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக செயலாளராக பொறுப்பு வகித்தார். பின்னர் திருநெல்வேலி முன்னாள் மேயர் சரவணனுடன் ஏற்பட்ட மோதலின் காரணமாக இருவரின் பதவியும் பறிக்கப்பட்டது.
அப்போது முன்னாள் திமுக அமைச்சரும் பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்த டிபிஎம் மைதீன் கான் திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் தற்போது தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திருநெல்வேலி வந்திருந்த போது ஒன்றரை மணி நேரம் முதல்வர் பங்கெடுத்த ரோடு ஷோவை அப்துல் வகாப் மிகச் சிறப்பாக நடத்தி காட்டினார். அதோடு, கட்சி பதவி இல்லையென்றாலும் பல்வேறு கட்சி பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வந்தார்.
நகராட்சி நிர்வாக துறை அமைச்சரும் திருநெல்வேலி பொறுப்பு அமைச்சருமான கே என் நேருவின் மிக நெருங்கிய ஆதரவாளராக மாறினார். இதையடுத்து, மீண்டும் திருநெல்வேலி மத்திய மாவட்ட பொறுப்பாளர் பதவி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப் நியமிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.