பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி தற்காலிக பேராசிரியர் பிரைட் என்பவர் போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி முன்னீர்பள்ளம் அருகேயுள்ள மருத குளத்தைச் சேர்ந்தவர் பிரைட் ஜூவைட்ஸ். இவர் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் வணிகவியல் துறையில் பேராசிரியராக பணியாற்றி வந்தார். 34 வயதான இவர் 17 வயது கல்லூரி மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். செல்போனிலும் ஆபாசமாக பேசியுள்ளார். மாணவி கொடுத்த புகாரையடுத்து, பிரைட் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.