நெல்லை மாவட்டம் திசையன்விளை மணலி விளையைச் சேர்ந்தவர் மதன். இவர், பல இளம் பெண்களை காதலிக்க முயன்றுள்ளார். ஆனால், யாரும் மதனின் காதலை ஏற்கவில்லை. ரிஜெ,க்ட் செய்துள்ளனர். இதனால், காதலி கிடைக்காமல் மதன் ஏமாற்றமடைந்துள்ளார். இந்த நிலையில் பிப்ரவரி 14 ஆம் தேதியான இன்று காதலர் தினத்தில் அவரின் காதல் ஏக்கம் இன்னும் அதிகமாகியுள்ளது. காதலி இல்லாத சோகமும் வாட்டியுள்ளது.
இதையடுத்து, தனக்கு காதல் கைகூடவில்லை , தனக்கு காதலி யாரும் இல்லை என்பதை திசையன்விளை இளம் பெண்களுக்கு அறிவிக்க முடிவு செய்துள்ளார். தொடர்ந்து, பொம்மை காதலி ஒன்றை வாங்கியுள்ளார். காதலர் தினமாக இன்று அந்த பொம்மை காதலியுடன் திசையன்விளை பகுதியில் வலம் வந்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
திசையன்விளை சுற்று வட்டார இளம்பெண்களே மதனுக்கு கொஞ்சம் இரக்கம் காட்டுங்கமா!