பாளையங்கோட்டை: ஆட்டிசம் சிறப்பு பள்ளியில் கயத்தார் சிறுமி மர்ம மரணம்

பாளையங்கோட்டை ஹை கிரவுண்ட் அருகே தனியார் ஆட்டிசம் குறைபாடு மற்றும் மன வளர்ச்சி குன்றியோருக்கான சிறப்பு பள்ளியில் உள்ளது. இந்த பள்ளியில் தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் பகுதியை சேர்ந்த மாடசாமி என்பவரின் இரண்டாவது குழந்தை அபிதா (6) ஆட்டிசம் குறைபாட்டால் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

சிறுமியை குணப்படுத்த வேண்டும் என்றும் மன வளர்ச்சி பெற வேண்டுமென்பதற்காகவும் இந்த பள்ளியில் 3 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் அந்த சிறப்பு பள்ளியில் இருந்து அபிதாவின் தாய் ஜெயாவிற்கு நேற்று இரவு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தங்களது மகளுக்கு உடல்நிலை சரியில்லை. அருகிலுள்ள தினியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்து நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுமதித்துள்ளனர். கயத்தாரில் இருந்து கிளம்பி வந்த குழந்தையின் பெற்றோர் குழந்தையை பார்க்க வேண்டும் கூறியுள்ளார். ஆனால் குழந்தையை பார்ப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இரவு 9 மணி அளவில் குழந்தை உயிர் இழந்து போனது பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. எனவே, குழந்தையை பார்ப்பதற்காக போராடியுள்ளார்.

இது குறித்து குழந்தையின் தாய் ஜெயா கூறுகையில், குழந்தையின் உடலில் காயம் இருந்தது. கண் மற்றும் தலைப்பகுதியில் காயங்கள் இருந்தது. மர்மமான முறையில் உயிரிழந்த தனது குழந்தைக்கு நியாயம் வேண்டும் . முழுமையான பிரேத பரிசோதனை அறிக்கையை பார்த்த பிறகுதான் குழந்தையின் உடலை வாங்குவோம் என்று பெற்றோர் அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.