திருநெல்வேலி மாநகர எல்லைக்குட்பட்ட தச்சநல்லூர் வடக்கு புறவழிச் சாலை ரயில்வே மேம்பாலம் அருகே 10649 எண்டாஸ்மாக் மதுபான கடை செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு கடையின் மேற்பார்வையாளர் ஆனந்தன் கடையை அடைத்து விட்டு சென்று விட்டார். மீண்டும் இன்று காலை 11:50 மணிக்கு மீண்டும் கடையை திறக்க விற்பனையாளருடன் வந்துள்ளார் . அப்போது, கடையின் ஷட்டர் உடைபட்டு இருப்பதை கண்டு அதிர்ந்தார். உள்ளே சென்று பார்த்த போது, நேற்றைய விற்பனை பணத்தில் ஐந்தாயிரம் மட்டும் குறைந்திருந்தது,.
அதோடு, 15 ஆயிரம் மதிப்பிலான மது பாட்டில்களும் திருடு போயிருந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தச்சநல்லூர் போலீசார்வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் . கடையில் உள்ள சிசிடிவி யில் ஒரு நபர் கடைக்குள் வந்து பூட்டை உடைத்து உள்ளே செல்வதும் , மதுபாட்டில்களை எடுத்துக்கொண்டு வெளியேறுவதும் போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது.
வழக்கமாக டாஸ்மாக் கடையும் பாரும் சேர்ந்து இருக்கும். பார் இருந்தால் எப்போதும் அங்கு ஆள் நடமாட்டம் இருக்கும். ஆனால், இந்த டாஸ்மாக் கடையோடு பார் இல்லாத நிலையில் கொள்ளை சம்பவம் மிக எளிதாக நடந்துள்ளது. இது குறித்து தச்சநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.