இட்டமொழி அருகே பரிதாபம்: கோவில் தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது சிறுவன் சாவு

இட்டமொழி அருகே தண்ணீர் தொட்டியில் மூழ்கி 3 வயது சிறுவன் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்டம் இட்ட மொழி அருகே உள்ள அழகப்பபுரம் வட பத்திரகாளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் இலங்காமணி . கோவில் பூசாரியான இவருடையமகன் சுந்தரபாண்டி (வயது 3). இட்டமொழி அருகேயுள்ள விஜயஅச்சம்பாட்டை சேர்ந்த நெல்லை மணி கண்டன் தனது தோட்டம் அருகே சிவன் கோவில் கட் டியுள்ளார். இந்த கோவிலில் நேற்று மாலை பூஜை செய்வ தற்காக இலங்காமணி தனது மகன் சுந்தரபாண்டியுடன் வந்தார் . இலங்காமணி கோவிலில் பூஜை செய்து கொண்டிருந்த போது, வெளியே விளையாடிக் கொண்டிருந்த சுந்தர பாண்டி அங்குள்ள தண்ணீர் தொட்டியில் விழுந்து உயி ருக்கு போராடினான். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த இளங்காமணி உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சுந்தரபாண்டியனை தொட்டியில் இருந்து மீட்டு சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோ தித்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வடக்கு விஜயநா ராயணம் போலீசார் வழக் குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.கோவில் தண்ணீர் தொட்டியில் சிறுவன் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது