நெல்லை வடக்கு மாவட்ட பா.ஜனதா செயலாளராக வக்கீல் வெங்கடாசலபதி என்ற குட்டி உள்ளார். இவர், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- 'அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை விமர்சனம் செய்யும் விதமாக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கருத்து தெரிவித்துள்ளார். தீர்ப்புக்கு பின்னணியில் பாரதிய ஜனதா கட்சி இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவரின் கருத்து நீதிமன்றம் மற்றும் நீதிபதிகள் மாண்பை குலைக்கும் வகையில் உள்ளது. அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் பிறப்பிக்கப்பட்ட தீர்ப்பின் பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக அவர் சொல்கிறார் . அப்படியென்றால் ஆதாரம் இருக்கிறதா? ஆதாரத்தை செல்வப்பெருந்தகை வெளியிட வேண்டும். இல்லையெனில் போலீசார் உரிய விசாரணை நடத்தி உண்மை தன்மையை வெளியே கொண்டு வரவேண்டும். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.'
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.










