பின்பக்கம் கண்ணாடி இல்லை : குழந்தைகளை ஏற்றி செல்லும் பள்ளி வாகனம்

கூடங்குளத்தில் உள்ள தனியார் பள்ளியின் வாகனம் பின்புற கண்ணாடி இல்லாமல் குழந்தைகளை ஏற்றி செல்கிறது.

நெல்லை மாவட்டத் கூடங்குளத்திலுள்ள ஹெப்ரான் என்ற தனியார் பள்ளி உள்ளது. 12 ஆம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றன. இந்த பள்ளிக்கு சொந்தமான வாகனத்தின் பின்புறத்தில் கண்ணாடி இல்லை, இது பாதுகாப்பு விதி மீறல் ஆகும் . குழந்தைகள் வாகனத்தில் இருந்து பின்புறம் வரும் வரும் வாகனங்களை எட்டிப் பார்க்க நினைத்து கீழே விழுந்தால் யார் பொறுப்பு ஏற்க முடியும்?

பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்களை திருநெல்வேலி மாவட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள் ஏனோ தானோவென்று ஆய்வு செய்து அனுமதி கொடுக்கிறார்கள். அந்த வாகனங்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா என்று கண்காணிப்பதில்லை. உடனடியாக, இது போன்று அலட்சியமாக வாகனங்களை இயக்கும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.