கூந்தன்குளத்தில் எங்கு நோக்கினாலும் பறவைகளின் கீச்சுக்குரல்கள்... பல வகையான வெளிநாட்டு பறவைகள் முற்றுகை!

கூந்தன்குளம் பறவைகள் சரணால யத்தில் வெளிநாட்டு பறவைகள் குவிந்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நெல்லை மாவட்டம் மூலைக்கரைப் பட்டி அருகே கூந்தன்குளத்தில் பறவைகள் சரணாலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் பெய்யும் பருவமழை மற்றும் மணிமுத்தாறு அணையில் இருந்து கூந்தன்குளத்துக்கு வரும் தண்ணீர் வரும் சூழலில் இயற்கையாகவே ரம்மியமாக காணப்படும். இந்த சமயத்தில் வெளிநாடுகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பறவைகள் வலசைக்கு வருவது வழக்கம். குளத்தில் உள்ள மரங்களில் பறவை கள் கூடுகள் கட்டி, முட்டையிட்டு அடைகாத்து குஞ்சுகளை பொரிக்கும். குஞ்சுகள் வளர்ந்த பின்னர் அவற்றுடன் பறவைகள் தாயகத்துக்கு திரும்பி செல் லும்.

கூந்தன்குளத்துக்கு வரும் வெளிநாட்டு பறவைகளுக்கு அப்பகுதி மக்களும் அடைக்கலம் தருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் உள்ள மரங்களிலும் கூடுகள் கட்டி வசிக்கும் பறவைகளை தங்களது குடும்ப உறுப்பினர்களாகவே பாது காத்து வருகின்றனர். பறவைகளுக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக விழாக்காலங்களில் கூட பொதுமக் கள் பட்டாசுவெடிப்பது இல்லை. மேளமும் அடிப்பது இல்லை. கடந்த ஆண்டு போதிய பருவமழை பெய்யாததால் கூந்தன்குளம் நிரம்பவில்லை. எனினும் , மணிமுத்தாறு அணையில் இருந்த இருந்து தண்ணீர் திறந்து திறந்து விடப்பட்டதால் கூந்தன்குளத்தில் தற்போது அதிகளவு தண்ணீர் உள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்தும். வெளிமாநிலங்களில் இருந்தும் அதிகள் வில் பறவைகள் கூந்தன்குளத்துக்கு வந் துள்ளன.

குளம் மற்றும் குளக்கரை, தெருக்கள் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மரங்களில் பறவைகள் கூடுகள் கட்ட தொடங்கியுள்ளன. இதனால் கூந்தன்குளம் முழுவதும் பற
வைகளின் கீச்சுக்குரல்ரகள் ஒலிக்க தொடங்கியுள்ளன. கூழைக்கடா, அரிவாள்மூக்கன், ஊசிவால் வாத்து, பட்டைவாயன், கரண்டிவாயன், செங்கல்நாரை, பாம்பு தாரா, வெள்ளை ஐஸ்பீஸ், பிளமிங்கோ உள்ளிட்ட பல்வேறு வகையான பறவை கள் கூந்தன்குளத்தில் குவிந்துள்ளன. இவை குளத்தில் உள்ள மீன்களை வேட்டையாடி உண்ணுகின்றன. மரக்கிளைகளிலும் கூடுகள் கட்டி இனப்பெருக்கத்தில் ஈடுபட்டுள்ளன. கூந்தன்கு ளத்தில் குவிந்த பறவைகளை சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.