சென்னையில் இன்று பிப்ரவரி 18 ஆம் தேதி தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் ராபர்ட் ப்ரூஸ் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது நெல்லை மாவட்டத்தில் நிலவும் மின்சார வாரியம் தொடர்பான குறைகளை களைய எம்.பி வேண்டுகோள் விடுத்தார். மின்வாரியத்தில் உள்ள பணியிடங்களை நிரப்பவும் கோரிக்கை விடுத்தார். ராபர்ட் ப்ரூஸ் எம்.பியின் மனுவைப் பெற்றுக் கொண்ட அமைச்சர் செந்தில் பாலாஜி உடனடியாக அவரது கோரிக்கையை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்தார்.










