நெல்லை நகரை சுற்றியுள்ள ஊர்களுக்கு செல்லும் மக்கள் புதியபேருந்து நிலையத்தில் வாகன காப்பகத்தில் இருசக்கர வாகனத்தை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால், எப்போதும் இருசக்கர வாகனங்களால் காப்பகம் நிரம்பி வழிகின்றது.
நெல்லை நகரத்தின் ஒட்டு மொத்த வாகனமும் பெருங்குவியலாக அங்கே நிறுத்தப்பட்டிருக்கிறது.முதல்தளம் நிரம்பி வழிந்தால், இரண்டாம் தளத்தில்தான் வாகனத்தை நிறுத்த வேண்டும். இங்கு, வாகனத்தை நிறுத்திவிட்டு மீண்டும் எடுப்பதற்கு தனித்திறமை வேண்டும். வாகன நிறுத்தத்திற்காக புதியதாக இரண்டு பிரம்மாண்ட கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. அதில் ஒன்றுதான் தற்போது செயல்பாட்டில் உள்ளது. மற்றொன்றும் செயல்பாட்டிற்கு வந்தால் மக்களுக்கு வசதியாக இருக்கும். ஆட்டோக்காரர்கள் கொள்ளை கட்டணம் கேட்பதால், இரு சக்கர வாகனத்தில் வந்து, இங்கு நிறுத்தி விட்டு மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய ஊர்களுக்கு செல்கின்றனர். இதனால், எப்போதும் இந்த இரு சக்கர வாகனம் நிறைந்து வழியும் . பெண்களுக்கு தனி வாகன நிறுத்த தனி இடம் இல்லாததால், அவர்களும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, பெண்களுக்கு தனி இட வசதி ஒதுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பல்வேறு கட்டடங்கள் பல வாடகைக்கு போகவில்லை. இதனால், மிகப்பெரிய நிதி நெருக்கடியில் திருநெல்வேலி மாநகராட்சி சிக்கியுள்ளதாக கூறப்படுகிறது.