6 அடி நிலத்துக்கு செல்ல 10 அடி பாதை தேவை: எதிர்பார்க்கும் காவலாகுறிச்சி கிராமம்

திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியம் ரெட்டியார்பட்டி அருகே அமைந்துள்ளது காவலா குறிச்சி கிராமம். நாடு சுதந்திரம் அடைந்தும் சுதந்திரம் அடையாமல் இருக்கும் கிராமம் தான் காவலா குறிச்சி . சுமார் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இங்கு வசித்து வருகின்றனர் இந்த கிராமத்தில் 70 ஆண்டுகளுக்கு மேலாக இறந்தவர்களின் உடல்களை சுடுகாட்டிற்கு எடுத்து செல்வதற்கு கூட பாதை இல்லை என்பதுதான் சோகத்திலும் சோகம்.

70 ஆண்டுகளாக விவசாய நிலங்கள் வழியாக ஒரு கிலோமீட்டர் தூரம் வரை நெற்க் கதிர்களின் நடுவே தான் இந்த கிராமமக்கள் இறந்தவர்களின் உடல்களை எடுத்து செல் கின்றனர்

கடந்த நாடாளுமன்ற தேர்தலை மக்கள் புறக்கணிக்க முடிவு செய்த நிலையில், அதிகாரிகள் தேர்தல் முடிந்தவுடன் சாலை வசதி செய்து தருவோம் என உறுதி அளித்தனர். ஆனால் ஒரு ஆண்டாகியும் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. கடந்த 2024 மார்ச் 15 அன்று ஆலங்குளம் தாசில்தார் தலைமையில் சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. நில அளவையாளர் பத்தடி அகல பாதை உள்ளதாக உறுதி செய்தார். ஒரு மாதத்திற்குள் சாலை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் ஒரு வருடமாகியும் அது சாலை அமைக்கப்படவில்லை . இது குறித்து பலமுறை அரசு அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பலன் ஏற்படவில்லை. இந்த கிராமத்திலுள்ள தெருக்கள் மழை காலங்களில் சேறும் சகதியுமாக காணப்படும்.

மக்கள் கோரிக்கை நிறைவேறும் வரை, காவலாகுறிச்சி ஊராட்சிக்கு தண்ணீர் மற்றும் வீட்டு தீர்வை கட்டணத்தை கடந்த நான்கு மாதங்களாக மக்கள் செலுத்தாமல் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனல். மதங்களது கோரிக்கைகள் நிறைவேற்றவில்லை எனில் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் புறக்கணிக்க போவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

மனிதன் விண்வெளிக்கு ராக்கெட் விடும் இந்த காலத்தில் , 70 ஆண்டுகளாக சுடுகாட்டிற்கு சாலை வசதி இல்லை என்பது பெரும் வேதனையளிக்கிறது ஆட்சிகள் பல மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது