திருநெல்வேலி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையடிவார அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சிவதலமான பாபநாசம் பாபநாசநாத சுவாமி கோயிலில் கடந்த 2005ம் ஆண்டு குடமுழுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதற்கு பிறகு 19 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் குடமுழுக்கு விழாவிற்காக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு பணிகள் நடைபெற்றது.. தற்போது பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் மே 4 ஆம் தேதி தேதி குடமுழுக்கு நடைபெறுவதாக இந்து அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதை முன்னிட்டு இன்று கால்கோல் நடப்பட்டது.
தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து பாபநாசநாதர் சுவாமி சமேத உலகாம்பிகை அம்மாளுக்கு அபிஷேகம் செய்து பின்னர் பசுவிற்கு
கோ பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. கோவில் முன் பிரகாரத்தில் உள்ள விநாயகர் கோவில் முன்பும் ,அதனை தொடர்ந்து யாகசாலை அமைக்கப்பட இருக்கும் இடத்திலும் பக்தர்கள் ஊர்வலமாக வந்து கால்கோல் விழா நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.