கிரெடிட் கார்டு விவகாரத்தில் இளைஞருக்கு மனஉளைச்சல் கொடுத்த ஐசிஐசிஐ வங்கி... நீதிமன்றம் கொடுத்த சாட்டையடி

திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி தாலுகா மேல கருங்குளம் அசோகாபுரம் என்ற பகுதியை சேர்ந்த கென்னடி என்பவரின் மகன் பிரபாகர் தனியார் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார். ஐசிஐசிஐ வங்கியின் கிரெடிட் கார்டு மூலம் செல்போன் மற்றும் லேப்டாப் ஆகிய இரண்டும் பிளிப்கார்ட் நிறுவனத்தில் ஆர்டர் செய்துள்ளார். பின்னர், லேப்டாப் வேண்டாம் என கேன்சல் செய்துள்ளார். லேப்டாப்பிற்கு ரூ. 26 ஆயிரத்து 277 மற்றும் செல்போனிற்கு ரூ. 7, 261 இரண்டும் சேர்த்து மொத்தம் ரூபாய் 33,588 செலுத்த வேண்டும் என கிரெடிட் கார்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. லேப்டாப் வேண்டாம் என்று ரத்து செய்து விட்டதால் ரூ. 26 ஆயிரத்து 277 தொகையை ப்ளிப்கார்ட் நிறுவனம் கிரெடிட் கார்ட் நிறுவனத்திற்கு திரும்ப செலுத்தி விட்டதாக இமெயில் மூலம் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால், ஐ.சி.சி.ஐ வங்கி பிரபாகர் மாத தவணையாக ரூ. 5836.58 செலுத்த வேண்டும் நிர்பந்தித்துள்ளது. அதாவது, லேப்டாப் ரத்து செய்த தொகையும் சேர்த்து செலுத்து வேண்டும் என ஐசிஐசிஐ வங்கி நிறுவனம் கட்டாயப்படுத்தி உள்ளது. இதனால், பிரபாகரன் ரூபாய் 5836.58 முதல் தவணையாக செலுத்தியுள்ளார்.

இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான பிரபாகர் ஐ சி ஐ சி நிறுவனத்திற்கு பணம் செலுத்தாமல் இருந்துள்ளார்.ஒரு கட்டத்தில் ஐசிஐசி நிர்வாகம் பிரபாகரை ரூ. 74,334 பைசா செலுத்த வேண்டும் என நிர்பந்தித்துள்ளது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான பிரபாகர் வழக்கறிஞர் பர்மிதா சவுகத் மூலம் வழக்கு நெல்லை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் வழக்கறிஞர் பிரம்மா ஆஜராகி வாதாடினார். இதையடுத்து, நீதிபதிகள் ஐசிஐசிஐ நிறுவனம் ரூபாய் 74.,334 தொகையை பிரபாகரிடமிருந்து வசூல் செய்வதை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், ஐசிஐசிஐ நிறுவனம் செய்த முறையற்ற வாணிபதால் பிரபாகருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடாக ரூ. 20,000 வழக்குச் செலவு ரூ. 5000 சேர்த்து மொத்தம் ரூ. 25 ஆயிரம் ஒரு மாத காலத்திற்குள் பிரபாகருக்கு வழங்க வேண்டும் . தவறினால் 9% வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.