திசையன்விளை அருகே பெட்டைகுளத்தில் மாணவர்களுக்கு திமுக சார்பில் தேர்வு உபகரணங்கள்.

நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைக்குளம் டி.டி.டி.ஏ. ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு தேவையான தேர்வு உபகரணங்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பெட்டைகுளம் நா.முருகன் ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் இராதாபுரம் கிழக்கு ஒன்றிய துணைச் செயலாளர் தனபால் , மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் நாராயணன்,மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் ஞானராஜ், கிளைச்செயலாளர்கள் பெட்டைகுளம் தாஜுதீன், சேவியர், உருமன்குளம் இசக்கிமுத்து, துரைகுடியிருப்பு வில்சன், ஒன்றிய பிரதி ஹஜ்வீர், புலிக்குளம் கார்த்திக், இளைஞர் அணி ஆல்வின்யானஸ்ட், புலிக்குளம் பாக்கியம், யோசேப்பு, பால், பெருங்குளம் ரத்தினம் மற்றும் கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.