விவசாயிகளுக்கான ஓய்வூதியம் வழங்கப்படுமா என கேள்வி எழுப்பிய போது, பணம் இல்லையே என சிரித்தபடி கூறிய உள்ளாட்சித் துறை அமைச்சர் கே என் நேரு நழுவினார்.
நெல்லையில் நடந்த விவசாயிகள் கருத்து கேட்பு கூட்டத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டார். நெல்லையில் நடைபெற்ற விவசாயிகள் கருத்து கேடபு கூட்டத்தில் 12 மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர். அவர்களின் கருத்துக்கள்முதல்வரிடம் சேர்க்கப்படும் . பெரும்பாலான விவசாயிகனள் நீர் மேலாண்மை சீராக்க வேண்டும். உரம் மற்றும் விதைகள் குறிப்பிட்ட நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். பயிர் காப்பீடு பயிர் கடன் முறையாக கிடைக் வேண்டும். பூக்கள் மற்றும் பல்வேறு முக்கிய பொருட்களை சேமித்து வைக்க கிடங்கு.
மக்காச்சோளம் பயிற்றுக்கு தமிழக அரசு தரப்பில் ஒரு சதவீத செஸ் வரி விதிக்கப்பட்டுள்ளதே என எழுப்பப்பட்ட கேள்விக்கு,. அது குறித்து தனக்கு தெரியவில்லை எனவும் அது குறித்து விசாரிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், 58 வயதுக்கு மேற்பட்ட விவசாயிகளுக்கு மாதம் தோறும் 3000 ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்திருக்கிறார்களே என்ற கேள்விக்கு , சொல்றதுக்கு நல்லாதான் இருக்குது , அதுக்கு பணம் வேணும்லா கூறியபடி நழுவினார்.