சமீப நாட்களாக முதல்வர் ஸ்டாலின் கள ஆய்வு செல்லும் இடங்களில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், இளைஞர்கள் அவரை அப்பா, அப்பா என்று அழைக்ககின்றனர் என்று பெருமிதாக கூறியிருந்தார். இதனை அதிமுகவினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பெண்கள், சிறுமிகள் பாலியல் வன்கொடுமையால் கதறும் போது அப்பா எங்கே போனார் என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியிருந்தார். இந்த நிலையில், பாளையங்கோட்டையில் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமாரும் முதல்வர் ஸ்டாலினை கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியதாவது, 'தாத்தா, சித்தப்பா, பெரியப்பானு சொன்னா தப்பு இல்லை. அப்பானு சொன்னா தப்பா போயிடாதா? பெத்த அப்பாவை பக்கத்துல வச்சுட்டு. டி.வில பார்க்குற ஸ்டாலினை குழந்தை அப்பானு கூப்பிட்டா என்னவாகும். எதை எழுதி கொடுத்தாலும் வாசிச்சிடுவீங்களா? எதை வாசிக்கனும்னு தெரியாதா?
இவ்வாறு அவர் பேசினார்.