திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் மகளிர் தினவிழா

திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரியில் மகளிர் தினவிழா இன்று காலையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சுந்தரவடிவேல் தலைமை தாங்கினார். ஆங்கிலத்துறைத் தலைவர் கே தமிழ்ச்செல்வி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியில் திசையன்விளை பேரூராட்சி தலைவர் எம். ஜான்சி ராணி , தொழிலதிபர் முருகானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மகளிர் தின வாழ்த்துரை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.காலை நிகழ்ச்சியின் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர் தணிகைச் செல்வி நன்றிகூறினார்.

பின்னர், மதியம் நடந்த நிகழ்ச்சிகளிவ்ல சிறப்பு விருந்தினராக தமிழக வெற்றிக் கழகம், மாநில கொள்கைப் பரப்பு செயலாளர் கேத்தரின் பாண்டியன், தமிழக வெற்றிக் கழகம் தெற்கு மாவட்ட துணைச் செயலாளர் முத்துலெட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கல்வியோடு கலந்து ஒழுக்கத்தினையும் கடைப்பிடிப்பது அவசியம் என்கிற தலைப்பில் பேசினர்.

நிகழ்ச்சியில் நெல்லை த.வெ.க. தெற்கு மாவட்ட செயலாளர் எஸ். ராஜகோபால், திசையன்விளை த.வெ.க நகர செயலாளர் கில்லிராஜா, தெற்கு மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் ஜெயராமன், தெற்கு மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் வடிவேல் முருகன் மற்றும் த.வெ.க தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி இணை செயலாளார் ஜி..சுரேஷ் ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் பதக்கங்களை வழங்கினார்கள். அனைத்து மகளிர் பேராசிரியர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது.

நிகழ்சியின் முடிவில் தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் முனைவர் ஆனந்தவேணி நன்றியுரை வழங்கினார்.நிகழ்ச்சியை தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ஆனந்தவேணி தொகுத்து வழங்கினார்.