மாஞ்சோலை மக்களுக்கு வீட்டு வசதி வாரிய வீடுகள் -உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

நெல்லை மாவட்டத்திலுள்ள மஞ்சோலை மக்களை அங்கிருந்து வெளியேற்றும் விவகாரத்தில் விரிவான மறுவாழ்வு திட் டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி மாஞ்சோலையை சேர்ந்த ஜான் கென்னடி, அமுதா,சந்திரா ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாஞ்சோலை விவகாரத்தில் மத்திய அரசு எந்த விதமான நடவடிக்கை எடுக்க போகிறது? அது எப்படியானது? என்பது குறித்து எங்களுக்கு தெளிவாக விவரிக்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் விக்ரம்நாத் மற்றும் சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சபரீஸ் சுப்ரமணியன் "மாஞ்சோலை விவகாரத்தில் அனைத்து உதவிகளையும் அங்கு இருப்பவர்கள் கேட்டதை விட அதிகமாகவே மாநில அரசு தரப்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 400 பக்கங்களுக்கும் அதிகமான விரிவான பிரமாணப் பத்திரம் உச்ச நீதிமன் றத்தில் தாக்கல் செய் யப்பட்டுள்ளது. மாஞ்சோலை பகுதியில் இருக்கும் சுற்றுச்சூழல் தொடர்பாக மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா எங்களிடம் கேட்டறிந்துள்ளார். மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு வீட்டு வசதி வாரியம் மூலம் வீடுகள் வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. விரைவில் மக்கள் மாஞ்சோலையை காலி செய்துவிட்டு வீடுகளில் குடியேறலாம் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து மனு தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர். 'மாஞ்சோலையில் இருந்து மாற்றப்பட்ட தொழிலாளர்களுக்கு தற்போது அரசு வழங்கி வரும் நிவாரணம் மறுவாழ்வு நடவடிக்கைகள் போதுமான அளவில் இல்லை. எனவே அந்த மக்களுக்கு கூடுதல் நிவாரணம் மற்றும் உரிய மறுவாழ்வு திட்டங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்த வேண்டும். இதுதான் எங்களது பிரதான கோரிக்கை'' என வாதிட்டார்.

அப்போது , மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசின் நிலைப் பாட்டை எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்கிறோம். அதற்கான கால அவகாசம் எங்களுக்கு தேவைப்படுகிறது ' என்று நீதிபதிகளிடத்தில் கோரிக்கை வைத்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட நீதிப திகள், "மாஞ்சோலை விவகாரத்தில் ஒன்றிய அரசு இரண்டு வாரத்தில்விரிவான விவரங்கள் கொண்ட அறிக்கையை பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும்" என உத்தரவிட்டனர். அதோடு, வழக்கு விசரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.