திருநெல்வேலி மாநகரில் நடை பயிற்சியில் ஈடுபடும் பெண்களை குறி வைத்தும் , தனியாக நடந்து செல்லும் பெண்களை குறி வைத்தும் மோட்டார் சைக்கிளில் வரும் ஹெல்மெட் அணிந்த கொள்ளையர்கள் தொடர்ந்து செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுகின்றனர். திருநெல்வேலியில் இதுவரை நடந்த அனைத்து செயின் பறிப்பு சம்பவங்களிலும் உடனடியாக திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி உத்தரவின் பேரில் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில், பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், மார்ச் 8 ஆம் தேதி காலை பாளையங்கோட்டை வ.உ.சி மைதானத்தில் விளக்குகள், சிசிடிவி கேமராக்கள் குறித்து போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி ஆய்வு மேற்கொண்டார். அப்போது, துணை கமிஷனர் விஜயகுமார் உடன் இருந்தார்.