திசையன்விளை வி.வி. பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா

திசையன்விளை வி. வி. பொறியியல் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் வனிதா தலைமை வகித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக மன்னார்புரம் பிரேயர் மருத்துவமனை நிறுவனர் டாக்டர் . ரீனா ரஸ்கின் மற்றும் டாக்டர் . பிங்கி ஆகியோர் கலந்து கொண்டனர். பேராசிரியை முத்துலட்சுமி சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினார். சிறப்பு விருந்தினர்கள் தங்களது மகளிர் தின உரையில், பெண்கள் தங்கள் கனவுகளை தொடரவும், இலக்குகளை அடையவும், சுதந்திரமான உலகத்தை உருவாக்க வேண்டும் . தங்களின் உரிமைகளில் காக்க விழிப்பாக இருக்க வேண்டும் . கல்வி உட்பட பல துறைகளில் சென்று சாதிக்க வேண்டும் . வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டத்திலும் பெண்கள் தாயாகவும் சகோதரியாகவும் தோழியாகவும் ஆசிரியையாகவும் முக்கிய பங்கு வகிக்க வேண்டுமெனற அறிவுரை வழங்கினர். முடிவில் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.