சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் மகளிரணி வுமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக நெல்லை மாவட்டம் ஏர்வாடி மீனாட்சிபுரம் அருகில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லத்திற்கு சென்றனர். அங்கு , பராமரிக்கப்படும் 100 முதியோர்களுக்காக பல நிகழ்ச்சிகளை வழங்கினார்.
அவர்களுக்கு சிற்றுண்டியும் அளித்தனர். இந்நிகழ்ச்சி வுமன் இந்தியா மூவ்மெண்டின் ஏர்வாடி நகரத் தலைவர் ஹமீதா தலைமையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வுமன் இந்தியா மூவ்மெண்டின் புறநகர் மாவட்ட தலைவர் மும்தாஜ் ஆலிமா , மாநில செயற்குழு உறுப்பினர் ஜன்னத் ஆலிமா ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்புறை வழங்கினார், நகர துணைத் தலைவர் மீராள்,செயலாளர் ஜன்னத் ,பொருளாளர் ஹாலித் பாத்திமா ,செயற்குழு உறுப்பினர்கள் ஃபர்கானா, பர்வீன் நிஷா, ஷைபு நிஷா,செய்யதலிபாத்திமா ஆகியோர் உடன் இருந்தனர்.