நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே விஜயச்சம்பாடு வடலிவிளை கிராமத்தைச் சேர்ந்தவர் அய்யாதுரை (55 ) இவருகு பானுமதி என்ற மனைவியும் மதுமிதா என்ற மகளும் உள்ளனர். மதுமிதா இட்டமொழி ஏ. வி ஜோசப் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிஸஸ் டூ வகுப்பு படித்து வருகிறார். அய்யாதுரை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இந்நிலையில், பிளஸ் டு படித்து வரும் அய்யாதுரையின் மகள் மாணவி மதுமிதாவிற்கு இன்று +2 கணித பாடத்தில் பொதுத்தேர்வு எழுத வேண்டியது இருந்தது. தந்தை இறந்த நிலையிலும் தந்தையின் உடலை தொட்டு வணங்கி விட்டு மாணவி மதுமிதா இட்ட மொழி ஏவி ஜோசப் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தேர்வு எழுத சென்றார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஆழ்த்தியுள்ளது.