Advertisement

கன்னிவெடியை கண்டுபிடிக்கும் ஷூ: நெல்லையில் 7 ஆம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்து சாதனை

பாளையங்கோட்டையிலுள்ள உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறான் மகிழ்ச்சி நகரை சேர்ந்த சாலமோன் டேவிட் என்ற மாணவன். இந்த மாணவன் தமிழ்நாடு ஐந்தாம் பட்டாலியன் என். சி . சி யில் இருக்கிறான். சாலமன் டேவிட்டிடம் தனி திறமை இருப்பதை அறிந்த பட்டாலியன் லெப்டினென்ட் கர்னல் கார்த்திகேயன் மற்றும் சக அதிகாரிகள் அவரது திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில் ஊக்கப்படுத்தினர். அவர்கள் அளித்த ஊக்கத்தால் மாணவன் சாலமோன் டேவிட் தற்போது ஸ்மார்ட் ஷூ ஒன்றை கண்டுபிடித்துள்ளார். இந்திய ராணுவ வீரர்கள் மிகவும் அபாயகரமான பகுதிகளில் போரில் ஈடுபடும் போது கன்னிவெடிகளில் இருந்து தப்பிக்க இந்த ஷூ உதவிக்கரமாக இருக்கும்.

இந்த ஷூ அணிந்து ராணுவ வீரர்கள் நடக்கும் போது சுமார் மூன்று மீட்டர் தூரத்தில் இருக்கும் கன்னிவெடி இருந்தால் கூட அது குறித்து சிக்னல் கொடுத்து எச்சரிக்கும். சென்சார் கருவியுடன் இந்த ஷூ தயாரிக்கப்பட்டுள்ளது. மாணவனின் இந்த கண்டுபிடிப்பு அசாத்தியமானது என்பதால் , தமிழ்நாடு சார்பாக டெல்லியில் நடைபெற்ற புதிய கண்டுபிடிப்புகளுக்கான போட்டியில் சாலமோன் டேவிட் பங்கேற்றான். 55 பேர் கலந்து கொண்ட இந்த போட்டியில் சாலமன் டேவிட் கண்டுபிடிப்புக்கு முதலிடம் கிடைத்தது. தொடர்ந்து, இந்த ஷூவை தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின், துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரிடம் காண்பித்து மாணவன் வாழ்த்து பெற்றான். பினினர், நெல்லை வந்த மாணவனை நெல்லை சரக டி ஐ ஜி மூர்த்தி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் படிக்க
nainar-nagendran-about-dmk
தி.மு.க ஏமாற்றிய விஷயங்கள்: நெல்லையில் பட்டியலிட்ட நயினார் நாகேந்திரன்
black-flag-protest-nainar-nagendran-house
தமிழகத்துக்கு தண்ணீர் தராத முதல்வர்களுடன் கை கோர்ப்பதா? நெல்லையில் நயினார் நாகேந்திரன் வீட்டில் கருப்புக் கொடி
retired-s-i-murder-student-arrest-in-nellai
நெல்லையில் ஓய்வு பெற்ற எஸ்.ஐ ஜாகிர் உசேன் கொலை : பிளஸ்-1 மாணவன் கைது
nellai-retired-si-murder-issue
நெல்லையில் முன்னாள் எஸ்.ஐ. கொலை : இளஞ்சிறாருக்கு தொடர்பு: தௌபிக்கின் மனைவி எங்கே?
accident-near-kavalkinaru-6th-class-student-died
காவல்கிணறு : விபத்தில் 6ம் வகுப்பு மாணவர் பலி
snake-in-corporation-pipe-water-in-nellai-thachanalur
கழிவுநீர், கலங்கல் நீர் இப்போது பாம்பு : நெல்லை மாநகராட்சி குழாயில் வந்து விழுந்தது!
delimitation-meeting-today-in-chennai
பத்தமடை பாய், கோவில்பட்டி கடலைமிட்டாய், கன்னியாகுமரி கிராம்பு: சென்னையில் விருந்தினர்களுக்கு மறக்க முடியாத பரிசு
railway-bridge-issue-in-palayamkottai
நீங்க போனா அவரு வெயிட்... அவரு வந்தா நீங்க வெயிட்!- பாளையங்கோட்டை மக்களின் சடுகுடு
water-issues-in-radhapuram
ராதாபுரம் சிற்றாறு பட்டணம் கால்வாய் : ஷட்டரை சரி செய்தீர்களா? இல்லையா? - ஆட்சியர் கேள்வி
2-killed-Accident-near-Kavalkinaru-bjp-leader-car
காவல்கிணறு அருகே விபத்து : பா.ஜ.க பிரமுகர் வாகனம் மோதி இரு தொழிலாளர்கள் பலி