தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தாலுகா கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அரியநாயகபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த 11 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் அபிஷேக் தேவேந்திர ராஜா நேற்று பள்ளிக்கு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பேருந்தை மறித்து சிறுவனை 3 சிறார்கள் அரிவாளால் வெட்டியுள்ளனர். தற்போது, சிறுவன் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
கொலை வெறி தாக்குதலுக்கு உள்ளான மாணவனை விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் முதன்மைச்செயலாளர் ஏ.சி.பாவரசு மாநிலதுணை செயலாளர் கனியமுதன், ஊடகமைய மாநிலச் செயலாளர் சஜன்பராஜ், மாவட்டச் செயலாளர்கள் எம்.சி.சேகர், முத்துவளவன், மகளிர்விடுதலைஇயக்கமாநில துணைச் செயலாளர் அமுதாமதியழகன்,இஎபா எம.சி.கார்த்திக் ஊடகமைய மாவட்ட அமைப்பாளர்நடராஜன் மகளிரணி பிரியா மனோகரன் , மாதவி கருங்குளம் ஒன்றியசெயலாளர் சிவகுரு சந்தித்து ஆறுதல் கூறினர்.