நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையை அடுத்த பாளையஞ்செட்டிகுளம் அருகே நேற்று இரவு தாலூகா காவல்துறையினர் வாகனச் சோதனை மேற்கொண்டனர். அப்போது, சந்தேகத்துக்கிடைமாக பொலிரோ ஜீப் ஒன்று கடந்து சென்றது. போலீசார் அந்த ஜீப்பை நிறுத்தி உள்ளேயிருந்த விக்னேஷ்குமார் (22) மற்றும் பிரவின் (23) ஆகிய இருவரிடத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பேசினர். தொடர்ந்து, ஜீப் சோதனை செய்யப்பட்டது. உள்ளே ஒரு அரிவாள் மற்றும் ஒரு கத்தி இருந்தது. அவற்றை போலீசார் கைப்பற்றின.
விசாரணையில்,இருவரும் திருப்பூரைச் சேர்ந்த கனல் கண்ணன் என்பவரின் தலைமையில் இரு ஆண்டுகளுக்கு முன் வெடி கொலை செய்யப்பட்ட வைகுண்டம் என்பவரின் கல்லறைக்கு மாலை அணிவிக்க வந்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால், கனல் கண்ணன் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தாலூகா போலீசார் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2022ம் ஆண்டு மார்ச் 10ம் தேதி, பாளையஞ்செட்டிகுளம் கிராமத்தைச் சேர்ந்த வைகுண்டம் (41) வெட்டிக் கொல்லப்பட்டார். சமீபத்தில்தான் இவர் கொல்லப்பட்ட வழக்கில் நெல்லை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளியான செல்வராஜ் என்பவருக்கு தூக்கு தண்டனையும், அந்தோணி பிரபாகர், அருள் பிலிப் உட்பட 4 பேருக்கு ஆயுள் தணடனையும் வழங்கப்பட்டது . இந்நிலையில் , நள்ளிரவில் வைகுண்டம் கல்லறைக்கு அவரது நினைவுநாளை முன்னிட்டு 2 பேர் ஜீப்பில் ஆயுதங்களுடன் வந்து மாலை போட சென்றது நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.