நெல்லை மாவட்டத்தில் இன்று மாலை 4:30 மணி வரை கடந்த 24 மணி நேரத்தில் 16.86 சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது:
மாவட்டத்தில் அதிகபட்சமாக நாங்குனேரியில் 22 மில்லி மீட்டரும் மூலைக்கரைபட்டியில் 18 மில்லி மீட்டரும் களக்காட்டில் 13.8 மில்லி மீட்டர் மணிமுத்தாறில் 13.600 மில்லி மீட்டரும் பாளையங்கோட்டை மற்றும் பாபநாசத்தில் தலா 12 மில்லி மீட்டரும் திருநெல்வேலியில் 9.2 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது. சேர்வலாறு அணை பகுதியில் 11 மில்லி மீட்டரும் அம்பாசமுத்திரத்தில் 10 மில்லி மீட்டரும் சேரன்மகாதேவியில் 16.8 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியிருக்கிறது.