நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழை காரணமாக , மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 88.40 அடியாகவும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 90.50 அடியாகவும், சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 103.51 அடியாகவும் உயர்ந்துள்ளது.
மணிமுத்தாறு அணைக்கு 487 கன அடி நீரும் பாபநாசம் அணைக்கு 912 கன அடி நீரும் வந்து கொண்டிருக்கிறது . அணையில் இருந்து விநாடிக்கு இருந்து 50 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது. மணிமுத்தாறு அணை பகுதியில் 15.8 மில்லி மீட்டர் பாபநாசம் அணைப்பகுதியில் 28 மில்லி மீட்டர் சேர்வலாறு அணைப்பகுதியில் 19 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 102.45 அடியாகவும், பாபநாசம் அணையின் நீர்மட்டம் 81.90 அடியாகவும் சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 66.14 அடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது .
கடந்த வருடம் இதே காலக்கட்டத்தில் பாபநாசம் அணையில் இருந்து 1404.75 கன அடி நீர் வெளியேற்றப்பட்ட நிலையில் தற்போது பெய்த மழையினால் 50 கன அடி நீர் மட்டுமே வெளியேற்றப்படுகிறது . எனவே , இந்த வருட கோடை காலத்தை சிறப்பாக சமாளிக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இன்று காலை 7 மணியுடன் கடந்த 24 மணி நேரத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளை தவிர்த்து திருநெல்வேலி மாவட்டம் முழுவதும்25.84 சென்டிமீட்டர் மழை பொழிவு பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக நாங்குநேரியில் 31 மில்லி மீட்டரும் நம்பியாறு அணைப்பகுதியில் 29 மில்லி மீட்டரும் பாபநாசம் அணையில் 28 மில்லி மீட்டர், சேர்வலாறு அணைப்பகுதியில் 19 மில்லி மீட்டரும் மணிமுத்தாறு அணை பகுதியில் 15.80 மில்லி மீட்டரும் அம்பாசமுத்திரத்தில் 12.8 மில்லி மீட்டரும் சேரன்மகாதேவி 17.8 மில்லி மீட்டரும்பாளையங்கோட்டையில் 16.2 மில்லி மீட்டரும் ராதாபுரத்தில்7 மில்லி மீட்டரும், திருநெல்வேலியில் 9.2 மில்லி மீட்டரும் களக்காட்டில் 15.8 மில்லி மீட்டரும் மூலைக்கரைபட்டியில் 20 மில்லி மீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது.
இது தவிர மலைப்பகுதிகளில் மாஞ்சோலை 48 மிமீ, காக்காச்சி 66 மிமீ, நாலு முக்கு 71 மிமீ, ஊத்து 88 மிமீ மழை, திருநெல்வேலி மாவட்டம் முழுவதும் 531.40 மில்லி மீட்டர் மழைப்பொழிவு அதாவது 53 சென்டிமீட்டர் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது