தமிழ்நாடு வனத்துறை சார்பில் மார்3 3 ஆம் தேதி நெல்லை அறிவியல் மையத்தில் ஓவியப் போட்டி நடைபெற்றது.
வனவிலங்குகளை மையமாக கொண்டு இந்த ஓவியப் போட்டி நடைபெற்றது. இதில்,நெல்லை மாவட்டம் முனைஞ்சிப்பட்டியிலுள்ள குருசங்கர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் கோசல்ராம் முதல் பரிசை தட்டி சென்றான். கோசல்ராமுக்கு பரிசுடன் ரொக்கம் 5,000 வழங்கப்பட்டது. பரிசு பெற்ற மாணவன் கோசல்ராமை பள்ளி தலைமை ஆசிரியை கோமதி சங்கரி மற்றும் ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக சங்கத்தினர் வெகுவாக பாராட்டினர்.