திருநெல்வேலி பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் ராபர்ட் ப்ரூஸ் எம்பி காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற்று வெற்றி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினரான ராபர்ட் ப்ரூஸ், சிறுபான்மை மாணவர்களை மறந்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அவரை கண்டித்து நெல்லை நகர சுற்று வட்டாரத்தில் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த நோட்டீசில் சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் ,சிறுபான்மை மக்களின் கல்வித் திட்டத்திற்காக பட்ஜெட்டில் வழங்கப்படும் தொகை குறைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை கண்டித்து நாடாளுமன்றத்தில் கொஞ்சம் பேசுங்க சார் என திருநெல்வேலி சமூக ஆர்வலர் எஸ் ஆர் சிராஜ் நோட்டீஸ்களை ஒட்டியுள்னர்.
மௌலானா ஆசாத் கல்வி அறக்கட்டளைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கல்வி உதவித் தொகையையும் 2025- 26 ஆம் ஆண்டில் சிறுபான்மையினருக்கான கல்வி வளர்ச்சி நிதி ரூ.1,572 கோடியிலிருந்து ரூ. 678 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது என்றும் அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.