நெல்லை மாநகராட்சியில் அதிகமாக சொத்து வரி செலுத்தாதவர்களின் முதல் 100 பேர் பட்டியல் விவரம் குறித்து பிரம்மா என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்டிருந்தார். மேலும், சொத்து வரியை பிரிக்க வேண்டியவர்கள் யார்? அந்த அலுவலர்கள் வரியை வசூலித்தார்களா? வரி வசூலிக்கவில்லை என்றால், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றியும் மனுவில் கேட்கப்பட்டிருந்தது.
இதையடுத்து மேலப்பாளையம் மண்டல பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முதல் இடத்திலுள்ள மேலப்பாளையம் அம்பை ரோட்டிலுள்ள புனித. சுவைக்கின் மெட்ரிக் பள்ளி ரூ. 3,61, 914 செலுத்த வேண்டியது உள்ளது. அடுத்ததாக, மேலகுலவணிகர்புரம் புனித. தாமஸ் பள்ளி ரூ. 3,50,861 கட்ட வேண்டியது உள்ளது. கோல்டன் ஜூப்ளி பள்ளி, வி.பி,.துரை, அல் மைனர் பிரைமைரி நர்சரி பள்ளி , அமித் ஹாபீக் குடும்பத்தினர், ஜெசுராஜ் ஹைடெக் மெட்ரிக் பள்ளி, ரகுமானியா மெட்ரிக் பள்ளிகள் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன. பட்டியலில் மேலப்பாளையம் சேவியர்ஸ் காலனி டான்பாஸ்கோ, செயின்ட் .பால்ஸ் பள்ளிகளும் இடம் பெற்றுள்ளன.