வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டு விழா டான்ஸ் ஆடி கலக்கிய குட்டீஸ்

நெல்லை மாலட்டம் வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை இந்திரா தலைமை தாங்கினார்.பள்ளி ஆசிரியை ஆர்காடியஸ் அமலா வரவேற்று பேசினார். ஆசிரியை துர்கா தேவி ஆண்டறிக்கை வாசித்தார்.பின்னர் பள்ளிக் குழந்தைகளின் பட்டிமன்றம் நடந்தது. தொடர்ந்து, சிலம்பம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

விழாவில் விளையாட்டுப் போட்டி மற்றும் கலைப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.முடிவில் ஆசிரியை ஹெலன் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆசிரியைகள் பாலா,சுதா மற்றும் பள்ளி மேலாண்மை குழு தலைவி பசுபதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.