அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் 8வது ஆண்டு தொடக்க விழா இன்று தமிழ் நாடு எங்கும் கொண்டாடப்படுகிறது. திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக செயலாளர், இசக்கிமுத்து அறிவுறுத்தலின்படி, அ.ம.மு.க. எட்டாம் ஆண்டு துவக்க விழா நாங்குநேரி ஒன்றியம் இட்டமொழி மற்றும் பாணங்குளம் ஆகிய ஊர்களில் நடந்தது.நிகழ்ச்சிக்கு கழக மருத்துவர் அணி மாநில இணைச் செயலாளர் இட்டமொழி டாக்டர் நோவா செல்வராஜ் தலைமை தாங்கினார். தொடர்ந்து, முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா படங்களுக்கு மாலை அணிவித்து அவர் மரியாதை செலுத்தினார். தொண்டர்களுக்கும் இனிப்பு வழங்கினார்.
நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகர் மாவட்ட கழக பொருளாளர், வழக்கறிஞர், எல்.கே.மாரியப்பன், மாவட்ட அம்மா தொழிற்சங்க பேரவை தலைவர் பெரியசாமி, மாநகர் மாவட்ட பிரதிநிதி கே.எஸ். குமாரசாமி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப ஆண்கள் பிரிவு தலைவர் எம்.பூல்பாண்டியன், இட்டமொழி ஊராட்சி கழகச் செயலாளர், ஜெகதீஷ், கழக நிர்வாகிகள் இசக்கிபாண்டி, முருகன், சுடலை, முத்துப்பாண்டி, முத்துவேல், ஆனந்தி, பத்திரத்தாய், செல்வகுமார், தங்கபுஷ்பம், பெனிட்டா, அருள், அந்தோணி, லிங்ககனி, சுரேஷ், லிங்கம், ரத்தினபாண்டி, உள்பட பலர் கலந்து கொண்டனர் .
நிகழ்ச்சிஏற்பாடுகளை அ.ம.மு.க மாநில மருத்துவர் அணி இணைச்செயலாளர் இட்டமொழி டாக்டர் .நோவாசெல்வராஜ் செய்து இருந்தார்.