திசையன்விளை, சந்தியம்மன் கோவிலில் கும்பாபிஷேக விழா நடந்தது. தொடர்ந்து மண்டல பூஜை நிகழ்வுகள் 41 நாட்கள் நடந்த நிலையில், இக்கோயில் மண்டலாபிஷேகவிழா நடந்தது.
விழாவில் மங்கல இசை, அனுக்ஞை, விக்னேஸ்வர, பஞ்சகவ்ய, கும்ப பூஜைகள், புண்ணியாகவாசனம், எஜமான சங்கல்பம், மகா கணபதி ஹோமம், பூர்ணாகுதி, வேதிகார்ச்சனை, அஷ்டோத்திர சத சங்கு, கலச பூஜைகள், மூர்த்தி, அஸ்திர, லட்சுமி ஹோமங்கள், தீபாராதனை, வேதபாராயணம், திருமுறை பாராயணம், விசேஷ அபிஷேகம், மண்டலபிஷேக கும்பாபிஷேகம், விசேஷ தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். லலிதா சகஸ்ரநாம பாராயணம், புஷ்பாஞ்சலி, விஷேசஅலங்கார பூஜை, உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. இதற்கான, ஏற்பாடுகளை சைவ வேளாளர் சமுதாய சங்கம் தலைவர் திருவம்பலம் பிள்ளை தலைமையில் குழுவினர்கள், இளைஞரணியினர் செய்திருந்தனர்.