திசையன்விளை வி.வி.பொறியியல் கல்லூரி 15 வது ஆண்டு விழா கல்லூரி தலைவர் சு.ஜெகதீசன் தலைமையில் நடந்தது. முனைவர் பத்மநாபன் வரவேற்று பேசினார்.கல்லூரி தலைவர் சு.ஜெகதீசன், சிறப்பு விருந்தினர் ஈஸ்வர் மூர்த்தி , கல்லூரி முதல்வர் பா.வனிதா ஆகியோர் குத்து விளக்கேற்றி வைத்தனர்.
கல்லூரி முதல்வர் வனிதா ஆண்டறிக்கை வாசித்தார்.முனைவர் ஆர்.ஜென்சி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் ஈஸ்வர் மூர்த்தி பேசுகையில், 'மாணவர்கள் கல்வி பயிலும் போதே தாங்கள் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளும் முறை ,அறிவுசார் திறன்கள் ,தலைமை பண்பு மற்றும் தன்னம்பிக்கையை மேம்படுத்திக் வேண்டும். போட்டி நிறைந்த உலகில் வேலை வாய்ப்பினை பெறுவதற்கு மாணவர்கள் தங்களை தாங்களே தயார்ப் படுத்திக் கொள்ள வேண்டும் .படிப்பு முறையிலும் அணுகுமுறையிலும் தனிப்பட்ட திறமைகளை உருவாக்க வேண்டும் . .அதற்காக மாணவர்கள் கடினமாக உழைக்க வேண்டும் ' என்றார்.
விழாவில் சாதனை புரிந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு கல்லூரி தலைவர் சு.ஜெகதீசன் சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.விழா முடிவில் முனைவர். முகமது பைசல் நன்றி கூறினார்.