
பிரபல எழுத்தாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிரவாகியுமான நாறும்பூநாதன் இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், எழுத்தாளர்கள் , இலக்கியவாதிகள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.
நெல்லையைச் சேர்ந்த பிரபல எழுத்தாளரும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நிர்வாகியுமான நாறும்பூநாதன் கடந்த 16- ந்தேதி ஞாயிற்றுக்கிழமை உடல்நலக்குறைவு காரணமாக உயிர் இழந்தார். அவரது இறுதி அஞ்சலி நிகழ்ச்சி இன்று பாளையங்கோட்டை சந்திநகரில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. முன்னதாக, அவரது உடலுக்கு நெல்லை மாவட்ட ஆட்சியர் சுகுமார், நெல்லைமாவட்டத்தின் முன்னாள் ஆட்சியரும் தற்போது எல்காட் நிர்வாக இயகுனருமான கார்த்திகேயன், நெல்லை சரக டிஐஜி மூர்த்தி, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாநிலத் தலைவர் மதுக்கூர் ராமலிங்கம் மற்றும் எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், தமிழ் ஆர்வளர்கள் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து அவரது இல்லத்தினல் இரங்களல் கூட்டமும் நடைபெற்றது. பின்னர், அவரது உடல் வீட்டில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு வி.எம்.சத்திரத்தில் உள்ள மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது .